தமிழகம்

தமிழகம்

தீவிரமடையும் கொரோனா பரவல்: 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. மேலும், ஜனவரி 19-ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது....
தமிழகம்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....
தமிழகம்

70 பேருக்கு கொரோனா. இன்று முதல் வண்டலூர் பூங்கா மூடல்!!

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , " கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர் 17.01.2022 முதல் 31.01.2022 வரை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது . 31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து , அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏனென்றால் அங்கு வேலை செய்யும் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனால் அவர்களின் மூலம் விலங்களுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தகைய முடிவை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு...
தமிழகம்

ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைப்பு

தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­களை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார். திறப்பு விழா­வுக்கு வர இய­லாத கார­ணத்­தால் காணொளி வசதி மூலம் அவர் திறப்பு விழா­வில் பங்­கேற்­றார். மருத்­து­வக் கல்­லூரி இல்­லாத 11 மாவட்­டங்­களில் இந்த கல்­லூ­ரி­கள் கட்­டுப்­பட்­டுள்­ளன. இந்­நி­கழ்­வில் பேசிய பிர­த­மர் மோடி, ஒரு மாநி­லத்­தில் ஒரே நேரத்­தில் 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­ப­டு­வது இதுவே முதல்­முறை என்­றார். முன்­ன­தாக, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஒரே நாளில் ஒன்­பது மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டதே சாத­னை­யாக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இந்­தி­யா­வில் 387ஆக இருந்த மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளின் எண்­ணிக்கை, பாஜக ஆட்­சிக்கு வந்­த­பின் 596ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் முந்­தைய மத்­திய அரசு மருத்­து­வம் சார்ந்த படிப்­பு­களை ஊக்­கப்­ப­டுத்த எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார். இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி விழா – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு;

தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்திலுள்ள வைணவ திருத்தலங்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழா, கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் உடன் பெருமாள் அருள்பாலித்தார். இந்த ஆண்டு விழா நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறப்பின் போது தடை விதிக்கப்பட்டது. திருப்பதியில்...வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிட் கட்டுப்பாடு காரணமாக, முக்கிய...
தமிழகம்

நீட் தேர்வு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு மற்றும் மருத்துவமனைகள் ஆய்வுக்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா சென் னைக்கு வந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விலக்க அளிக்கப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுஷ்...
தமிழகம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 18-ம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள...
தமிழகம்

ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானதும் சிறப்பும் வாய்ந்தது தமிழிசை: பாரதிய வித்யா பவனில் நடைபெறும் தமிழிசை தொடக்க விழாவில் டாக்டர் சுதா சேஷய்யன் புகழாரம்

தமிழிசை ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தமிழிசை விழாவை டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் அவர் பேசியதாவது: திருமயிலை பாரதிய வித்யா பவனில் நடக்கும் தமிழிசை விழாவில் பங்குபெறவிருக்கும் கலைஞர்களுக்கு வணக்கம். திருமயிலைதொன்மையானது. தமிழிசை அதைக் காட்டிலும் தொன்மையானது. இரண்டும் ஒன்றிணைவது வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. திருவள்ளுவரின் `குழல் இனிது' என்னும் குறளின் மூலம் பல விதமான வாத்தியங்களின் இசை அவர் காலத்திலேயே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இசை குறித்த நூல்கள் தமிழில் இருந்திருக்கும். அத்தனை பாரம்பரியமும் தொன்மையும் வாய்ந்தது தமிழிசை. மிடறு என்பது தொண்டையைக் குறிக்கும். மிடற்றிசை என்பது பாடுவது. யாழ் இசைத்தபடி பாடியவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். பெரிய யாழ்இசைத்தவர்கள்...
தமிழகம்

மதுரை, கோவை, திருச்சி உட்பட 5 வானொலி நிலையங்களை பிரச்சார் பாரதி முடக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை ஆகிய 5 வானொலி நிலையங்களை முடக்க கூடாது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் நிறுத்தி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையில் இருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்.29-ம் தேதி நான் கோரியபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரச்சார் பாரதி விளக்கம் அளித்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஒரு மாநிலத்துக்கு, நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் ஒன்று போதும் என பிரச்சார்...
தமிழகம்

முதல்வரின் மருத்துவக் காப்பீடு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: செய்தியாளர்களுக்கு அட்டைகளை வழங்கினார்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களுக்கான காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்தமாதம் முடிவடைகிறது. முன்னதாக, கடந்த 2021-22 ஆண்டுக்கானசுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, சென்னை எம்ஆர்சி நகரில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில், முதல்வரின்விரிவான காப்பீட்டுத் திட்டத்தை ஜன.11 (இன்று) முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதற்கான ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், முதல்வர் முன்னிலையில், தமிழக அரசுக்கும், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.1,248.29 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 11 தொடர்சிகிச்சை முறைகள்,...
1 503 504 505 506 507 563
Page 505 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!