தமிழகம்

தமிழகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது: தலா ஒரு லட்சம் பேர் தட்டிக்கழிப்பதாக தகவல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு லட்சம் பேர் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் தட்டிக் கழிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டம் தொடங்கினாலும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் 100% சதவீதம் எட்ட முடியாத நிலை உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பலரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஓரளவுக்கு திருப்தியாக இருந்தாலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சவால் நிறைந்ததாக...
தமிழகம்

திருப்போரூர் கோயில் சொத்துகளை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்போரூர் கந்தசாமி மற்றும் ஆளவந்தான் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை மீட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை அபகரிக்க 20-க்கும்மேற்பட்ட குழுக்கள் முயற்சித்து வருவதாகவும், அதை தடுத்து, கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டுமென வழக்கறிஞர் ஜெகந்நாத் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயில் சொத்துகளை மறுஉத்தரவு வரும்வரை யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர் நாத் பண்டாரி,...
தமிழகம்

பொங்கல் தொகுப்பு குளறுபடி குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை: அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி

பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், குளறுபடிகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு, 2 கோடியே 15 லட்சத்து67,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் கரும்பு மற்றும் பொங்கல்தொகுப்பு பை உட்பட 21 பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொருட்கள் வாங்கப்பட்டன. கரும்பை பொறுத்தவரை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஒரு கரும்பு ரூ.33 என்ற அடிப்படையில், 6 அடி உயரத்தில் சராசரிதடிமன் உள்ளதாக இருக்க வேண்டும். கரும்பை வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன. பொங்கல் பையை பொறுத்தவரை ஒப்பந்ததாரர் மூலம், சிவகாசி, திருப்பூர், பவானி பகுதிகளில்...
தமிழகம்

இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,பொங்கல் பண்டிகை என்பதால்,கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.இதற்கிடையில்,15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,இவர்களும் இனி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வரை...
தமிழகம்

தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமார் 10 லட்சம் பேர் தகுதியுள்ளவர்களாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தவணை தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உள்பட இன்று மொத்தம் 600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்பட உள்ளது....
தமிழகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம் மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசுடன் மோதல் போக்கு: தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

பொங்கல் பரிசுப் பொருட்களில் கலப்படத்தால் கோபத்தில் இருக்கும் மக்களிடம் இருந்து தப்பவே, குடியரசு தினவிழா ஊர்வலத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களும், ஊடகங்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம் இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகின்றனர். தங்களின் வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க திமுக அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை. டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற தமிழக அரசு வாகனம் தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறேன். திமுக ஆட்சியில் வடிகட்டியவரலாற்றைதானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள். தமிழைதெய்வமாக நாங்கள் வணங்குவதுபோல் நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழில் இருந்து...
தமிழகம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு ஜன.26-ல் தி.க. ஆர்ப்பாட்டம்

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜன.26-ம் தேதி புதுடில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடம் அளிக்காமல் புறக்கணித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு நாள் அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், எந்த வகையான அம்சங்களும், அடையாளங்களும், தகவல்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றவையே. அந்த அடிப்படையில் தமிழகத்துக்கான அலங்கார அணிவகுப்பில், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி., பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நியமித்த 10...
தமிழகம்

பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: பொன் ராதாகிருஷ்ணன்

''உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி தொடரும் ,'' என , முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.சிவகாசியில் அவர் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ., சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி தொடரும். சிவகாசி மேயர் பதவியை பா.ஜ.,விற்கு வழங்க வலியுறுத்துவோம். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்கள், இறப்புகளால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்ல முதலாளிகளும் தான். எனவே பாதுகாப்புக்கான திட்டங்கள் தீட்டப்படும். பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க கூட முடியாது.கொரோனா தடுப்புவிதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் முயற்சியால் 150 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கேட்டதற்கும் அதிகமான தடுப்பூசிகளை பிரதமர் வழங்கி உள்ளார். இதை முறையாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.பொய்யான வாக்குறுதி:தேர்தலுக்காக தி.மு.க., வின் முதல் மூலதனமே...
தமிழகம்

50 ஆண்டுக்கு பின் சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயர்! பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு

புகழ்பெற்ற சென்னை மாநகராட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு பின், பெண் ஒருவர், அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மேயராவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலேயே மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை பெருநகர மாநகராட்சி, 15 மண்டலங்கள் உள்ளடக்கிய, 200 வார்டுகளை கொண்டு உள்ளது. மேயர் பதவிக்கு, இதுவரை மூன்று முறை நேரடி தேர்தல் நடந்தது. தற்போது நடக்க உள்ள தேர்தலில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.பணிகள் மும்முரம்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தன்படி, வார்டு வரையறை, வார்டு இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு, ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரம்...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்-க்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று முன்தினம் அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில்  8 சுற்றுகளில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம்...
1 502 503 504 505 506 563
Page 504 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!