ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள்
ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்கின்றன. கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஈஷா அறக்கட்டளை சார்பில், இன்றும்(2-ம் தேதி), நாளையும் (3-ம் தேதி)தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடக்கின்றன. ஈஷா தன்னார்வலர்கள் மூலம் நடக்கும் இவ்வகுப்பில் 'சூர்யசக்தி' என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும்போது, 'உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் தூண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க தொடங்கும்' என்றார். காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை, நண்பகல் 11.30 மணி முதல் 1.15...
