தமிழகம்

தமிழகம்

நாகூர் தர்காவில் கொடியேற்றத்துடன் துவங்கிய 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நாகையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தது. ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு வானவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை வணங்கினர். இதைத் தொடர்ந்து நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்-எனும் சந்தனக்கூடு விழா வரும் 13 ஆம் தேதி நாகையிலிருந்து...
தமிழகம்

ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்

கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கும் சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதன் முதலாக உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவைக்கான ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.5-ம் தேதி) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் பேரவைக்கூட்டம் என்பதால், முதன் முதலாக அவர் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடத்த முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததால் கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் தொடங்குகிறது. இன்று காலை, 9.50 மணிக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத்தலைவர் கு.பிச்சாண்டி...
தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 4, 5-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 6, 7-ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 3-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 10 செமீ, பாம்பன்,...
தமிழகம்

ஒமிக்ரான் பரவல்… தமிழக முதல்வர் இன்று ஆலோசனை!

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது....
தமிழகம்

“அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கையில் எடுத்த சசிகலா?”.. வெளியான பரபரப்பு அறிக்கை

சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் சிறப்பு தொகுப்பாக கொள்முதல் செய்யப்படும் செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று அவர்களுடைய வங்கி கணக்கில் தொகையையும் செலுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  ...
தமிழகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த, சுமார் 8 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கெனவே, விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து,விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கத் தவறிய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி, பாதிப்புகளை மதிப்பிட்டு, உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மத்திய அரசு புயல் நிவாரணம் வழங்கவில்லை என்று காரணம் கூறாமல், முழுமையாக சேதமடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000, மறு சாகுபடி செலவுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்த விவசாயிகளுக்கு,...
தமிழகம்

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை: அமைச்சர் தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 2018 முதல் மின் இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. மின்சார கட்டணத்துக்கு ஜிஎஸ்டி என்பது கிடையாது. தற்போதுள்ள ஆட்சியில் புதிதாக மின் துறையில் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. கடந்த ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது கூட அவர்களுக்கு தெரியவில்லை. விவசாய இலவச இணைப்புக்கு கடந்த ஆட்சியிலேலே மீட்டர் பொருத்தப்பட்டது என்றார்....
தமிழகம்

தமிழகத்தில் 59 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: புத்தாண்டு நாளில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

2008-ம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்த 59 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் கடந்த 18.1.2008 அன்று 700 பேர் நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில், 170 பேருக்கு ஏற்கெனவே இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 10 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 14 ஆண்டுகளாகியும் வழங்கப்படாததைக் கண்டித்து, அவர்கள் பணிக்கு சேர்ந்து 15 -வது ஆண்டு தொடக்க நாளான ஜன.18-ம் தேதி சீருடையில் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிய தயாராகி வருவதாக 2008 'பேட்ஜ்' சப் இன்ஸ்பெக்டர்களிடையே ரகசியமாக தகவல்கள் பகிரப்பட்டன. இதுகுறித்து கடந்த டிச.28-ம் தேதி 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது. அதில் 2 ஆண்டுகளாக...
தமிழகம்

சென்னையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதன் நீட்சியாக, மறுஉத்தரவு வரும் வரை சென்னையில் கடற்கரை மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டது. இந்தக் கட்டுப்பாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்தது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டும் பிரத்யேக நடைபாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,489 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

மத்திய அரசின் புதிய திட்டத்தால் டிஜிட்டல் மயமாகிறது மின்வாரியம்

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதன் வாயிலாக, மின் வாரியம் 'டிஜிட்டல்'மயமாக உள்ளது.மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.வினியோக பெட்டிகள்இத்திட்டத்திற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால் கடனில் 60 சதவீதம் மானியமாகி விடும்; அந்த தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. தமிழக மின் வாரியம்,இத்திட்டத்தின் கீழ் அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்த...
1 505 506 507 508 509 563
Page 507 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!