தமிழகம்

தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வில் 73 இடங்கள் நிரம்பின: 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

மருத்துவப் படிப்புக்கான சிறப்புப்பிரிவினர் கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரம்பின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 24 ஆயிரத்து 949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 913 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடம்பெறாத...
தமிழகம்

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் – அரசு அறிவிப்பு

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பிப்ரவரி 1 முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாண்டு மாணவர்களை தவிற மற்ற மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பம் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு அளித்த கூடுதல் தளர்வுகளில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது. 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி...
தமிழகம்

பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி, பிப்ரவரி 4ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவித்தார். 5ஆம் தேதி வேட்பு...
தமிழகம்

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ் நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று சிறப்பு பிரிவினரான, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5 சதவிகித மருத்துவக் கல்வி...
தமிழகம்

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 107 பேர் பத்மஸ்ரீ விருது பெற உள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த சதிராட்டக் கலைஞரான முத்து கண்ணம்மாள், கிளாரிநெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் பழம்பெரும் நடிகை...
தமிழகம்

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்! தமிழக அரசு அதிரடி

புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது , துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் . அதில் , புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு 11 வயது சிறுவர் மீது தவறுதலாக பாய்ந்தது . நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து , அவர் உயிரிழந்தார் . இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் கடந்த சில...
தமிழகம்

ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம்…புதிய வசதிகளுடன், கூடுதல் படகுகள் நிறுத்த ஏற்பாடு

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 150 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதில், நாகூரார் தோட்டத்தில், 500 படகுகளை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மீனவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்படுவதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984 முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் மூலம், தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன்...
தமிழகம்

கோவளம் – நீலாங்கரை இடையே கடலில் நீந்தி 8 வயது சிறுமி சாதனை

கோவளம் முதல் நீலாங்கரை வரை, கடலில் 6 மணி 14 நிமிடத்தில், 19 கி.மீ., கடல் துாரம் நீச்சல் அடித்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என, கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திஉள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா, 8. இவர், பிறந்த ஒன்பது மாதத்திலே, கடலில் மிதக்கும் அளவுக்கு, தந்தை அரவிந்த் பயிற்சி அளித்தார். தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற தாரகை ஆராதனா, நேற்று, கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை, 19 கி.மீ., துாரத்தை,...
தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது....
தமிழகம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு – முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மாலை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து,இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.அந்த வகையில்,வருகின்ற ஜன.27 ஆம் தேதி மாற்று திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்பின்னர்,ஜன.28 மற்றும் ஜன.29 ஆகிய இரண்டு நாட்களில்,அரசுப் பள்ளி...
1 501 502 503 504 505 563
Page 503 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!