தமிழகம்

தமிழகம்

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கில் பொருட்களை தயாரித்துவிட்டு லட்சக்கணக்கில் அவற்றை விற்றுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். இதில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி, தமிழக உள்துறைச் செயலர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே...
தமிழகம்

சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக (பொறுப்பு) கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் அனுரத்னா. இவர், தலைமை மருத்துவர்பொறுப்புக்கு வந்த பிறகு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால், பொன்னேரி சுற்று வட்டார மக்களின் அன்பை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்,நவீன மருத்துவ உபகரணங்களை கையாள்வது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த பயிற்சி காலங்களில், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை (பொறுப்பு) மருத்துவராக விஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டார். மருத்துவர் அனுரத்னா பயிற்சிமுடிந்து கடந்த 13-ம் தேதி மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். ஆனால், அவர் ஏற்கெனவே இருந்த பதவியை தொடர விடாமல், அவரை விட பணியில் 5 ஆண்டுகள் ஜூனியரான விஜய் ஆனந்த் அப்பணியை தொடர்ந்து...
தமிழகம்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என்று தமிழக அரசு சொல்வதில் நியாயம் இல்லை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள் குறைக்கும்போது, தமிழக அரசு மட்டும் குறைக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது என அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல் மீதானவரியை லிட்டருக்கு ரூ.5, டீசல்மீதான வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதை பின்பற்றி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட 25 மாநிலங்களின் அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன. அதன்படி, தமிழகத்திலும் வரியை அரசுகுறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், '2014-ல் இருந்தஅளவுக்கு பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய அரசு குறைத்தால், மாநிலங்களின் வரிதானாகவே குறைந்துவிடும்' என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கூறியுள்ளார். இதுஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும்...
தமிழகம்

“சுவாச பாதை தொற்று”.. கொரோனாவோடு அட்மிட் ஆன கமல்ஹாசன்

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு இடையில் சமீபத்தில் பல்வேறு பணிகளுக்காக இவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு! இந்த நிலையில் சென்னை திரும்பி வந்தவருக்கு செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இதுகுறித்து செய்துள்ள ட்வீட்டில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கொரோனா காரணமாக...
தமிழகம்

இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் 111 கோயில்களின் முப்பரிமாண காட்சியை காணலாம்

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, பக்தர்கள் வசதிக்காக பூஜைகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள், அறநிலையத் துறையின் இணையதளத்தில் உள்ளன. இதுமட்டுமின்றி, கோயில்களின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்கும் வசதி, கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 77...
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், 24 மற்றும் 25-ம் தேதிகளில்...
தமிழகம்

நவ. 25ம் தேதி முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே வாரியம் கீவரும் 25ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729), புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும், எழும்பூர்-மதுரை...
தமிழகம்

தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழு இன்று வருகை

தமிழகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. வடகிழக்கு பருவ மழைக் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களை கண்டறிவதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சேத விவரங்களை அளித்த திமுக எம்.பி. டி. ஆர். பாலு தெரிவித்திருந்திருந்தார். மேலும் வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 2,629 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மத்திய குழு தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட, 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் 21-ம்தேதி (இன்று) பிற்பகல் வருகின்றனர்., நவ....
தமிழகம்

சசிகலா வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்: எடப்பாடி அதிர்ச்சி !

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறிது காலத்துக்கு பிறகு அரசியலில் இறங்கியுள்ளார் சசிகலா. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார். தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் இருப்பதாக கூறிவரும் சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார். அடுத்தடுத்த தேர்தல் தோல்வி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் என அதிமுக அல்லோகலப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் பேசியது இதன் பின்னணி தான் எனவும் கூறப்படுகிறது. செல்லூர் ராஜு, ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி....
தமிழகம்

ஜனவரி 20-ஆம் தேதி முதல், டி செமஸ்டர் தேர்வு; உநேரயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின் செயலாளர் கார்த்திகேயன், தேர்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் 11 மாணவர்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடப்பு செமஸ்டர் தேர்வை நேரில் எதிர்கொள்வது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் ஆன்லைன் தேர்வு முறை வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 2 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறினார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்....
1 495 496 497 498 499 545
Page 497 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!