தமிழகம்

தமிழகம்

லிஃப்ட்-ல் 2 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உள்பட 13 பேர்.. சென்னையில் பரபரப்பு!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நேற்று இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் மின் தூக்கியை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 13 பேர் பயணித்த அந்த மின் தூக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது. மின்தூக்கியில் சிக்கி இருந்தவர்கள் அதில் ஒட்டப்பட்ட அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உள்ளே சிக்கியிருக்கும் விபரத்தை ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதை கண்டனர். அரை மணி நேரத்தில் மின்தூக்கி பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன. லிஃப்ட் ல் சிக்கி இருப்பவர்களின்...
தமிழகம்

ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்,வருகின்ற ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளார்.டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதையடுத்து, அதனை திறந்து வைக்க முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரான...
தமிழகம்

இருபோகம் விளையும் விவசாய நிலத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்க கஞ்சங்கொல்லை விவசாயிகள் எதிர்ப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தில் விவசாய நிலத்தில் இயற்கை எரி வாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் வட்டத்தின் கடைகோடி கிராமம் கஞ்சங்கொல்லை. இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கீழணையில் தேக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி இங்கு சுமார் 500 ஏக்கரில் ஆண்டு தோறும் இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் கீழ், விளைநிலங்களில் கீழ்குழாய் பதிப்பதற்கு இக்கிராமத்தை சேர்ந்த 100 விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடந்த மாதம் துணை ஆட்சியர் கண்ணனிடம், விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய் பதிக்க கூடாது எனக்கூறி ஆட்சேபனை தெரிவித்து தனித் தனியாக மனுக்கள்...
தமிழகம்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விபரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதனை திருத்தம் செய்துகொள்ள டிஎன்பிஎஸ்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும்...
தமிழகம்

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயக்குமார்

திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார் . அதன் பின் சாலை மறியல் , நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு , சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது . இதனால் கடந்த 21 ஆம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை புழல் சிறை முன்பு கூடினர் . சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது. எனவே, மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை...
தமிழகம்

டாப்சிலிப்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனச்சரக பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தல் மற்றும் சாலையோர புதர்கள் அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய பல்லுயிர் பெருக்கமண்டலமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப் பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகியவனச்சரகங்களுக்கு, ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கோடை வெயில் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றால் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதை தடுக்க காப்பகம் முழுவதும், சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட, டாப்சிலிப் வழித்தடத்தை வனத்துறையினர் சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இது...
தமிழகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அறிமுகம்; அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம்: திறமையான இளைஞர்களை பயன்படுத்தி செயல்படுத்தப்படும்

திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம் என்ற புதியதிட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த நிலையில், அடுத்து வந்த நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள்தோறும் மானிய கோரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்றுதான், 'முதல்வர் புத்தாய்வுத் திட்டம்'. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வரும் இத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக தற்போது திட்டத்துக்கான நிதி ஒதுக்கி, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் திறமைகளில் அரசு அதிக நம்பிக்கைகொண்டுள்ளது. எனவே, இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்த, புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன்...
தமிழகம்

பஜ்ஜி சாப்பிட்ட செலவு 3 கோடி ரூபாய்.. பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு

"தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்பு பணிக்கு செலவு செய்திருப்பது, அமைச்சர்கள் டில்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான்" என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மண்டைக்காட்டில் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி கொடை விழாவின் ஒடுக்கு பூஜையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "ஒரே நேரத்தில் ரஷ்யா - உக்ரைன் அதிபர்களிடம் பேசிய ஒரே பிரதமர் மோடிதான். மோடியை எதிர்க்க பிரதமர் ஆசையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கும்பலாக கிளம்பியுள்ளனர்....
தமிழகம்

புதுச்சேரி எல்லையின் அடையாள வளைவு, காமராஜர் சதுக்கம் இடிப்பு

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டில் அமைக்கப்பட்டிருந்த அடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை இடிக்கப்பட்டன. புதுச்சேரி - விழுப்புரம் இடையேபோக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச் சூழலில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கண்டமங்கலம், திருபு வனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கடை கள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மழைநீர்செல்லும் வகையில் சாலை யின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக் கப்படுகின்றன. மேலும் திருபுவனை, திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளைஇணைக்கும் வகையில் 2 மேம் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன....
தமிழகம்

சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விரைவில் சிகிச்சைப் பிரிவு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. இதற்கான மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படவுள்ள சிகிச்சைப் பிரிவு வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படும். இப்பிரிவில் பொது மருத்துவர், சிறுநீரகவியல் துறை மருத்துவர், பிளாஸ்டிக் சர்ஜன், என்டோகிரைனாலாஜிஸ்ட் என சிகிச்சையின் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். வருங்காலத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இச்சிகிச்சைப் பிரிவு...
1 493 494 495 496 497 563
Page 495 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!