தமிழகத்தில் மே.1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்
தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....