தமிழகம்

தமிழகம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்ததால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும்புலியூர் டி.டி.கே.நகர், வன்னியன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில், என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் அங்கு சென்று...
தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இனி, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவாரூர் அருகே இளவங்கார்குடியில் புதிய ரேஷன் கடையினை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்லணையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன்...
தமிழகம்

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

அதி­முக கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­விக்கு ஓ. பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் போட்­டி­யின்றித் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­முக தேர்­தல் ஆணை­யர்­கள் பொன்­னை­யன், பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் ஆகி­யோர் இந்த அறிவிப்பை நேற்று வெளி­யிட்­ட­னர். இந்நிலையில், “அதி­மு­க­வில் இனி இரட்­டைத் தலை­மை­தான். சசி­கலா டிடி­வியை கட்­சி­யில் இணைப்­பது குறித்த கேள்­விக்கே இட­மில்லை. அதி­மு­க­வில் நிரந்­தர பொதுச்­செ­ய­லா­ளர் ஜெய­ல­லிதா மட்­டும்தான்,” என முன்­னாள் அமைச்­சர் கடம்­பூர் ராஜு தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, பெரம்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறுகையில், ஜெயல­லிதா நினை­வி­டத்­துக்கு சசி­கலா தொண்­டர் படை­யு­டன் வர­வில்லை; குண்­டர்­கள் படை­யு­டன் வந்­தார். தொண்டர்களுக்காக சசி­கலா அறிக்கை விடு­வது கொம்பு சீவி விட்டு, அதற்­காக முத­லைக் கண்­ணீர் வடிப்­பதைப் போன்­ற­தா­கும் என்று ஜெயக்­கு­மார் விமர்­சித்­துள்­ளார்....
தமிழகம்

இபிஎஸ் கார் தாக்கப்பட்ட விவகாரம்; வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என டிடிவி தினகரன் விளக்கம்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் காரை வழிமறித்து அமமுகவினர் கோஷமிட்ட நிலையில், அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்தனர். இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் 'அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும், 'நீட்...
தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரியில் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், இதனால் வடமேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'ஜாவத்' புயல் காற்றழுத்த தாழ்வு...
தமிழகம்

சிங்காரச் சென்னை 2.0 திட்டம்: 1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 147 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஆயிரத்து 10 சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 622 உட்புற தார் சாலைகள், 307 கான்கிரீட் சாலைகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் 147 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய, இணையவழி ஒப்பந்தங்களாக இ-டெண்டர் முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...
தமிழகம்

தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார். கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கைக எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7,70,000 பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4,48,000 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில்விடுப்பட்டவர்கள் சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு...
தமிழகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புகுந்து கலகம் உருவாக்க சதி: போலீஸ் கமிஷனரிடம் ஜெயக்குமார் மனு

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தலைமைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அலுவலகத்திற்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மற்ற அதிமுக தொண்டர்கள் புகழேந்தியை தாக்கினார்கள். இதனால் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவினருக்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள், கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனக் கலவரத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் முறையான நடவடிக்கை எடுத்து...
தமிழகம்

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
தமிழகம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது; வங்கக்கடலில் உருவானது ‘ஜோவத்’ புயல்: வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்குகிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஜோவத்' புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்க உள்ளது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை அல்லது அதிகனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,'ஜோவத்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியை 4-ம் தேதி (இன்று) காலை நெருங்கக் கூடும். அதைத் தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்....
1 492 493 494 495 496 545
Page 494 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!