தமிழகம்

தமிழகம்

துபாய் எக்ஸ்போ; தமிழ்நாடு அரங்கு- முதலமைச்சர் திறப்பு

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாயில், எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் கடைசி வாரம், தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி. எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த அரங்கில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாகக் கண்காட்சி அமைந்துள்ளதாகவும், அதுதொடர்பான புரிதலைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான...
தமிழகம்

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது . 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. கண்காட்சியில் "தமிழ்நாடு அரங்கு" உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இன்று முதல், மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்ற அவரை துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி மற்றும்...
தமிழகம்

வலைதள தகவலை நம்ப வேண்டாம் விரைவில் குரூப்-4 தேர்வு அறிவிக்கை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம்வெளியிடப்பட்டு, ஜூன் மாதம்போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 5,255 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த 23-ம் தேதி இரவு தகவல் பரவியது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 குறித்ததவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தஅறிவிக்கையை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்த்து அறிந்து கொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது....
தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வரும் இலங்கை கடற்படை , அவற்றை திருப்பி அளிக்காமல் நாட்டுடைமையாக்கி கொள்கிறது. அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் ,சில மாத கால இடைவெளிக்கு பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரமும், உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அத்துடன் அவர்களின் 2 படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான நாகை , காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
தமிழகம்

சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் இன்று துபாய் பயணம்: முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்

துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் துபாய் செல்கிறார். தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குஆதாரமாக முதலீடுகளை அதிகஅளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளைஅதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றியஅரங்கம் அமைக்கப்பட உள்ளது.இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்கமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும்நோக்கில், முதல்வர்...
தமிழகம்

“தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு” – சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!!

விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அன்றைய தினம் திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பொது விவாதத்தின்போது கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்தாமன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் எத்தனை? வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு...
தமிழகம்

விருதுநகர் பாலியல் வழக்கில் அரசியல் தலையீடின்றி விசாரணையை முடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, நேற்று அவர்வெளியிட்ட அறிக்கையில், 'விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்துபல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும். இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும்...
தமிழகம்

“திருமண உதவித்திட்டம், உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது ஏன்?” -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ``பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர். தற்போது இந்தத் திட்டம்...
தமிழகம்

தண்டனை ரத்து கோரி யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு: சிபிசிஐடி, கோகுல்ராஜ் தாயார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜ் தாயார் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் வேறு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35), அவரது கார் ஓட்டுநர் அருண் (22) உட்பட பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். முதலில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சாட்சிகள் பலர் பிறழ்சாட்சியாக...
தமிழகம்

பள்ளி பாடப் புத்தகங்கள் விற்க 276 கடைகளுக்கு அனுமதி: தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதிலும் 276 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 1-12 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புத்தகங்கள் விற்பனையை இதுவரை பாடநூல் கழகமே நேரடியாக செய்து வந்தது. இந்நிலையில், புதிய முயற்சியாக சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. விருப்பம் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விற்பனைக்கு அனுமதி கோரி 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகத்தில் 276 சில்லறை...
1 491 492 493 494 495 563
Page 493 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!