தமிழகம்

தமிழகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி சொத்து மீட்பு

கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, 4,920 சதுரஅடி பரப்பளவு உள்ள மனை லட்சுமணன் என்பவருக்கு மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனையை 4 பேர் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி குடியிருந்தும், கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டும் இருந்தனர். நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், நியாய வாடகையை செலுத்தாததால், இணை ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், உள் வாடகைதாரர்கள் ஆக்கிரமித்திருந்த 1,874 சதுரஅடி மனை, கடந்த 2018 ஜூலை 30-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சுவாதீனம் எடுக்கப்பட்டது. ஆனால், 1,525 சதுர அடி பரப்பளவுள்ள மனையில்...
தமிழகம்

கோவையில் அதிர்ச்சி..!! மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் 2 வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இந்த கிளினிக்கில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.சக்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவரிடம், சான்றிதழ் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மருத்துவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து சந்தேகம் அதிகரித்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக அவினாசி போலீசார் மற்றும் தாசில்தார் ராகவி ஆகியோருக்கு மருத்துவ அதிகாரிகள் தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ...
தமிழகம்

திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று பிற்பகல்...
தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய நடைமுறை அறிமுகம்

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடபுதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நீங்கலாக, இதர அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுகுறித்த தகவல்தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை ஒருமுறை பதிவின் (ஒடிஎம்) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு சான்றிதழ்தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ, ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாளுக்கு 2 தினங்களுக்கு முன்புவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், மறுபதிவேற்றம்...
தமிழகம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜகண்ணப்பன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அண்மையில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை சாதி பெயரை சொல்லி ராஜகண்ணப்பன் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.  ...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கம் – தொமுச அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.இதன்காரணமாக, தமிழகத்தில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 68% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.இதனால்,மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த...
தமிழகம்

சென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம் – சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு: ஓட்டுநர், உதவியாளர் கைது; பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 7 வயது மாணவன்உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.   நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான். வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான். அப்போது ஓட்டுநர்...
தமிழகம்

”சசிகலாவுக்கு கௌரவமான பதவி! ஆனா, முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு தான் இருக்கணும்” – எடப்பாடி பழனிச்சாமி

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தற்போது மாற்றம் தெரிகிறது என்கிறது அக்கட்சி வட்டாரம் . சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான சிலருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையில் ஆத்தூர் இளங்கோவனும் பங்கேற்றிருக்கிறார். எடப்பாடிக்கு மிக நெருக்கமான ஆத்தூர் இளங்கோவன் சமீபத்தில் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. நடராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா தஞ்சாவூர் சென்றிருந்தபோது கூட அவருடன் செல்போனில் பேசியதாகவும் கட்சி வட்டாரத்தில் தகவல் இருந்தது. இந்த நிலையில் ஆதரவாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுகவிற்கு வந்தாலும்கூட அவருக்கு முழுமையான அதிகாரம் இருக்கக் கூடாது. ஒரு கௌரவமான பதவி வேண்டுமானால் இருக்கலாம். இப்போது இருக்கும் இந்த செட்டப்பிலேயே தொடரவேண்டும். முடிவெடுக்கும் அதிகாரம் எல்லாம் நமக்கு தான் இருக்க...
தமிழகம்

நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ளுங்கள்: துபாய் தமிழர்களிடையே முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வளம், அறிவு, தொழில் நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள்பயணமாக கடந்த 24-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். துபாயில் நடந்துவரும் சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அமீரக அமைச்சர்களையும் தொழில் துறையினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில், திமுக அயலக அணி சார்பில் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ,...
தமிழகம்

மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவை என்று உண்மைக்கு மாறாக தமிழக அரசு கூறியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

மத்திய அரசு ரூ.6,500 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை முழுமையாக கொடுத்ததை கூறாமல் ரூ.16 ஆயிரம் கோடி நிலுவை என உண்மைக்கு மாறாக தமிழக அரசு உயர்த்தி கூறி வந்தது ஏன்என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பட்ஜெட்டை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் 84 சதவீதம் ஆசிரியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. எஞ்சியுள்ள 16 சதவீதத்தில் சீருடை, புத்தகம் உள்ளிட்டவற்றுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இவை தவிர, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கான தொகையை மத்திய அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசின்திறன்...
1 490 491 492 493 494 563
Page 492 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!