தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்தார். அதன் படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினரும் வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 360 இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்....