தமிழகம்

தமிழகம்

பள்ளி மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஸ்ரீமதியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை...
தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: பல உயிர்களை இழந்த பின்னர் தான் தமிழக அரசு கொண்டுவருமா ? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பல உயிர்களை இழந்த பின்னர் தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் 'ஆன்லைன்' சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. ஆன்லைன் ரம்மி தடை தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான...
தமிழகம்

‘எம்.பி. செந்தில் குமாரின் நடவடிக்கை தேவையற்றது’ – கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு

திமுகவை சேர்ந்த ட்விட்டர் பயனாளிகள், அரசு நிகழ்ச்சிகளும், வீட்டில் நடைபெறும் சடங்குகளும் ஒன்றாகுமா என்று கார்த்தி சிதம்பரத்திடம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்கள். அரசு விழாவின்போது பூஜை நிகழ்ச்சியை தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது இந்த நடவடிக்கை தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரத்தில், ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்குவதற்காக பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உறவினர்கள் கல்வீச்சு... போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு அரசு விழாவில் இந்து...
தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலைக்கு டெண்டர் அறிவிப்பு

சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள்...
தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம்...
தமிழகம்

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர். பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என...
தமிழகம்

காமராஜரின் 120-வது பிறந்தநாள்: ராமதாஸ், அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் வாழ்த்து

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்வி கண் திறந்த கர்ம வீரர் என்று போற்றப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120வது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்! கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது...
தமிழகம்

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு.

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன்...
தமிழகம்

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்

ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, 'கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட 4 தமிழக தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ குழு விசாரணை அறிக்கையில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஈரோடு, சேலத்தில் சுதா, ஓசூரில் விஜய், பெருந்துறையில் ராம்பிரசாத் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். 4 தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகளை 15 நாளில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். 4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் உடனடியாக மூடப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.50...
தமிழகம்

நான் நலமாக இருக்கிறேன்; கவலை வேண்டாம் – ராமதாஸ் ட்வீட்

என்னுடைய உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் நேற்று முன்தினம் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய அவர் , தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் . கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும்...
1 486 487 488 489 490 563
Page 488 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!