தமிழகத்தில் அதி கனமழை : குமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 15ஆம் தேதி கனமழை மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் விடுக்கப்படுள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்திலும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...