கொரோனா லாக்டவுன் : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை – ஆட்சியர் உத்தரவு
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்றைய தினம் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி அபிஷேக...