5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசம் – மா.சுப்ரமணியன் அறிவிப்பு
தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால் 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி பலியாகின்றனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதற்கான தடுப்பூசியாக நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தோம். தினந்தோறும் எழும்பூர்...