“தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு” – சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!!
விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அன்றைய தினம் திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பொது விவாதத்தின்போது கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்தாமன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் எத்தனை? வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு...
