தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். பசும்பொன் தேவர் ஜெயந்தி முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு.? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருவதால் ஏற்பாடுகள் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திமுக கழகத்தினுடைய தோழர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். தேவரின் தங்க கவசம் அதிமுக தரப்பினராக உள்ளார்கள் என்பது குறித்த கேள்விக்கு.? தேவரின் தங்க கவசம் குறித்த வழக்கு வருகின்ற 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் உள்ளது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவின் படி செயல்படும். தேவர் ஜெயந்தி...
