தமிழகம்

தமிழகம்

ஆசிரியர்களுக்கு பணி ஓதுக்கீடு உத்தரவு: மேயர்:

மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.  மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து கல்வி உபகரணங்கள் மாநகராட்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாநகராட்சி ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கணக்கு), திரு.வி.க....
தமிழகம்

பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை அமைச்சர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் நாளை (30.10.2022) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 வது குரு பூஜை விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு, ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள...
தமிழகம்

தேனியில் பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தேனியில், மாவட்ட விளையாட்டுத் திடலில், பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், 100 மீட்டர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார். பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100-வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத்துறை சார்பில் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில்,தேனி மாவட்ட விளையாட்டுத் திடலில் பொது சுகாதாரதுறை சார்பில் நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமையேற்று, 100 மீட்டர் விளையாட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொது சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, நிர்வாக அலுவலர் மணிசேகரன், நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியை ஒட்டி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,பேட்மிட்டன், லக்கி கார்னர், இசைநாற்காலி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில், முதல் மூன்று...
தமிழகம்

புதிய வழித்தடங்களில், அரசு பேருந்துகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி, கொடிமங்கலம் ஊராட்சிகளில் , மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்ததார். பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்றாக சாலைப் போக்குவரத்து உள்ளது. ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லவும் மாணவ மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் பொதுப் போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச...
தமிழகம்

மதுரை செல்லூர் கனகவேல் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் இருப்பதால் மக்கள் சாலை மறியல்

மதுரை 4வது வார்டுக்கு உட்பட்ட ஆபீஸ்சர்ஸ் டவுன்,கனகவேல் நகர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் தேங்கியுள்ள மழை நீரில் கழிவு நீரும் சேர்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும்,பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்லூர் பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வி காளமேகம்...
தமிழகம்

மதுரையில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து துணை ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு மின்சார சுடுகாடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அங்கு 6பேர் கும்பல் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது 4 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.450 கிலோ கஞ்சா,மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி, சங்கு பிள்ளை மடம் முருகன் மகன் மணிகண்டன் என்ற ஒன்னரை மணி (22). சிந்தாமணி, வீமாபிள்ளை சந்து முருகன் மகன் மணிமாறன் என்ற குட்டை...
தமிழகம்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் செயல்பாடுகள்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி மாணவ மாணவியருக்குநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அனைத்து பள்ளிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்காத குப்பைகளில் இருந்து அழகு சாதன பொருட்கள் பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாகபரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செல்வராணி நகர்மன்ற...
தமிழகம்

அரசு மேல் நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்த ஆண்டிப்பட்டி எம் எம்எல்ஏ மகாராஜன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, குன்னூர் பகுதி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இன்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளி திடீரென ஆய்வு மேற்கொண்டார், அப்போது குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லாதது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் இந்த பகுதி நீர் பிடிப்பு பகுதி எனவே பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியாது என தெரிவித்தார். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கிராமத்தை நீர் பிடிப்பு பகுதி என்று தெரிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து...
தமிழகம்

தேனிமாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக உணவு தின விழா

தேனிமாவட்டம் கம்பத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு "கம்பம் அல் அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி" யில்  பெற்றோர்கள் கலந்து கொண்டு உணவு தயார் செய்யும் போட்டியில் நிகழ்ச்சியில்   சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் சையது சுல்தான் இப்ராஹிம் MBBM MD , Ex JD , அரசு மருத்துவர் Dr .சிராஜ் தீன் , பள்ளி தாளாளர் நைனார் முகமது , பள்ளி முதல்வர் அகமது மீரான் , கம்பம் சாதிக் MC ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி  மாவட்டம்   ...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நாங்கள் அனைவரும் சாமியாராகி விடுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பன்னீர் செல்வம் தலைமையில்  அதிமுகவினர் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வது குறித்தும் பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் பேசும் போது; 90 சதவீதம் அதிமுக நிர்வாகிகள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் தங்க கவசத்தை மீட்டு கொண்டுவர முடியவில்லை. நல்ல ஆம்பளையாக இருந்தால் பசும்பொன் வந்து பார் என சவால் விட்டார். மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினிடம் பேசிய ஆதாரம் நிரூபித்தால் ஓபிஎஸ் அணியிலிருந்து அனைத்து நிர்வாகிகளும் சாமியாராக சென்று விடுவோம் பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை செருப்பால் அடித்து...
1 458 459 460 461 462 556
Page 460 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!