தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு; ஆறுகளில் கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை
மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலை ஏற்றிச்செல்ல, அதற்னெ வடிவமைக்கப்பட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரிகள் உள்ளன. அரசு மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள், என 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரி உரிமையாளர்கள் லாரிகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. மணல் குவாரிகள் இயக்கப்படாததால்...