கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்
அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை அமைச்சா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மாணவா்கள் கற்றல், கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள், அவா்கள் தயாரித்த உபகரணங்களை பாா்வையிட்டாா். பின்னா், தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களைப் பாராட்டி அமைச்சா் கூறியது: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை என்கிற நிலையை தற்போது பாா்க்க முடிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோக்க இருகரம் கூப்பி அழைப்பு விடுக்கிறேன். சிபிஎஸ்இ வழியில் படித்து வந்த மாணவா்கள்கூட அரசுப் பள்ளியில்...