வளர்த்தவர்களை மறந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம்: சசிகலா பேச்சு
ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, ராமாவரம் தோட்டத்தில் ரத்ததான முகாமை சசிகலா தொடங்கி வைத்தார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்று தொடர் தோல்விகளை எப்போதும் கண்டதில்லை. எனவே, இத்தருணத்திலாவது அனைவரும் சிந்தித்து பார்த்து அதிமுகவின் நன்மை கருதி ஒற்றுமையோடு செயல்பட்டால் கட்சி நிச்சயம் வலிமை பெரும். விதைத்தவர்கள், வளர்த்தவர்கள், காப்பாற்றியவர்கள் என இவர்களை மறந்ததன் விளைவே இன்று கட்சி அனுபவித்துவரும் நிலை என்பதை கூறிக்கொள்கிறேன். ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டால் வரும் காலங்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம். நாம் ஒன்றிணைந்து கரம் கோர்ப்போம். இவ்வாறு பேசினார். ...