தமிழகம்

தமிழகம்

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் இதுதொடர்பாக இன்று அறிவித்தவற்றில் குறிப்பிடப்பட்டவை: * செய்முறை தேர்வு: 10, +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 25-04-2022ல் தொடங்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தொடங்கி மே 28-ம் வரை தேர்வு நடைபெறும் +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தொடங்கி மே 30 -ம் தேதி வரை நடைபெறும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மே 5 முதல் மே 13 வரை நடைபெறும். தேர்வுகளைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஜூன் 17ஆம்...
தமிழகம்

மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக 26, அதிமுக 4, அமுமுக 2, சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நகர்மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா, புதன்கிழமை மன்னார்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான கே.சென்னுகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி, கூட்ட அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலில் திமுக உறுப்பினர்களும், பின்னர், அமமுக உறுப்பினர்களும், இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து தங்களது வார்டுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். வார்டு எண் வரிசைப்படி பதவியேற்புக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். முதலில்...
தமிழகம்

இன்று மாலை 6 மணி முதல் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்மீக சிறப்புமிக்க ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் சமநிலை பெற முடியும்.ஆரா தூய்மை பெறும். எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். மேலும், தியானம் செய்வதற்கும் இது...
தமிழகம்

தந்தத்துக்காக யானைகள் வேட்டை; தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

'யானைகள் வேட்டையாடுவதை தடுக்க, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.யானை வேட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை, நீதிமன்றம் அமைத்தது.சிறப்பு புலனாய்வுக் குழுவில், கேரள மாநில அதிகாரிகளை சேர்ப்பது குறித்து பதில் அளிக்க கோரப்பட்டது.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரள அரசு சார்பில், சிறப்பு பிளீடர் நாகராஜ் நாராயணன் ஆஜராகி, ''மலையாட்டூரில் 18 யானைகள் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த, பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் மனு சத்யனை, குழுவில் நியமிக்க உள்ளோம்,''என்றார். இதையடுத்து, 'கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யானைகள் வேட்டையை தடுக்க முடியும்....
தமிழகம்

உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது. முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில், நேற்று அதிகாலை முதல் மாலை வரை மூன்று விமானங்களில் சுமார் 1,500 மாணவர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 23 பேரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்து உக்ரைனில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை...
தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், 2ம் தேதி டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும், 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும்...
தமிழகம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அருகே உள்ள கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வட மேற்கு திசையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது இது நான்காவது முறையாகும். மேலும் இந்த மாதத்தில் மட்டும் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகம்

போலியோ முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகாமில் பங்கேற்கலாம்.விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும்...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ‘நிதி ஆயோக்’ குழுவினர் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலினை மத்திய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் சரஸ்வத் தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், சிறப்பு செயலர் கே.ராஜேஷ்வர ராவ், ஆலோசகர் பி.சாரதி ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, திட்டம், வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். முதல்வர் உடனான சந்திப்புக்கு பிறகு, நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாநில திட்டக் குழு, நிதி ஆயோக் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. 2022-23 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல்...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியைவிட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் முழுமையாக தெரிவிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும், என...
1 431 432 433 434 435 499
Page 433 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!