தமிழக பொது பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார்
தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்நடந்ததால், முந்தைய அதிமுக அரசின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த நிலையில், கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆக.13-ம் தேதி தாக்கல் செய்தார். 'காகிதம் இல்லா சட்டப்பேரவை'...