தமிழகம்

தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வரும் இலங்கை கடற்படை , அவற்றை திருப்பி அளிக்காமல் நாட்டுடைமையாக்கி கொள்கிறது. அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் ,சில மாத கால இடைவெளிக்கு பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரமும், உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அத்துடன் அவர்களின் 2 படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான நாகை , காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
தமிழகம்

சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் இன்று துபாய் பயணம்: முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்

துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் துபாய் செல்கிறார். தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குஆதாரமாக முதலீடுகளை அதிகஅளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளைஅதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றியஅரங்கம் அமைக்கப்பட உள்ளது.இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்கமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும்நோக்கில், முதல்வர்...
தமிழகம்

“தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு” – சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!!

விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அன்றைய தினம் திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பொது விவாதத்தின்போது கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்தாமன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் எத்தனை? வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு...
தமிழகம்

விருதுநகர் பாலியல் வழக்கில் அரசியல் தலையீடின்றி விசாரணையை முடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, நேற்று அவர்வெளியிட்ட அறிக்கையில், 'விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்துபல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும். இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும்...
தமிழகம்

“திருமண உதவித்திட்டம், உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது ஏன்?” -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ``பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர். தற்போது இந்தத் திட்டம்...
தமிழகம்

தண்டனை ரத்து கோரி யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு: சிபிசிஐடி, கோகுல்ராஜ் தாயார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜ் தாயார் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் வேறு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35), அவரது கார் ஓட்டுநர் அருண் (22) உட்பட பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். முதலில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சாட்சிகள் பலர் பிறழ்சாட்சியாக...
தமிழகம்

பள்ளி பாடப் புத்தகங்கள் விற்க 276 கடைகளுக்கு அனுமதி: தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதிலும் 276 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 1-12 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புத்தகங்கள் விற்பனையை இதுவரை பாடநூல் கழகமே நேரடியாக செய்து வந்தது. இந்நிலையில், புதிய முயற்சியாக சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. விருப்பம் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விற்பனைக்கு அனுமதி கோரி 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகத்தில் 276 சில்லறை...
தமிழகம்

சென்னையில் நாளை நம்ம ஊரு திருவிழா – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை (மார்ச் 21 ஆம் தேதி) 'நம்ம ஊரு திருவிழா நடைபெறும்' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.மேலும்,இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி,நாளை சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்த நிலையில்,தற்போது இவ்விழா நடத்தப்படுகிறது. மேலும்,நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் பிற மாவட்டங்களில் படிப்படியாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலை பண்பாட்டுத்துறை,பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க சுற்றுலாத்துறை சார்பில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், பேட்டி மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், சிசிடிவி காட்சிகளை பொறுத்தவரை கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ பதிவுகள் இல்லை எனவும், ஆனால் அதனை ஆதாரமாகக் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும் தான் என்றும்,...
தமிழகம்

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரல்: ஒருங்கிணைப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவு

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவிநீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அதிமுக பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் அதிமுக கட்சிவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தவறு. மாற்றுக்கட்சிகளுக்கு செல்லாத 2016-ம் ஆண்டு அன்று 5 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களைக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து...
1 427 428 429 430 431 499
Page 429 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!