தமிழகம்

மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

139views
மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவைக் கண்மாய் அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேற்படி, கைது செய்த நபர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 650 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!