தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் ஐயப்பன் கோவில்ஆராட்டு விழாவையொட்டி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் ரயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலிலை அடைந்து ஆராட்டு விழா நடைபெற்றது. ஐயப்பன் கோவில் ஆராட்டு விழாவில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் திரவியம் ராமசாமி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம்,...
தமிழகம்

வேலூர் மாவட்ட திமுக உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் முன்னிட்டு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் உள்ளவைகை அணையின் கட்டுமானப் பணிகள்

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அணையான வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ளது. சிறப்பு வாய்ந்த வைகை அணையை பார்வையிட தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு அதிகப்படியான மழை பெய்த காரணத்தினால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி பத்தாயிரம் கன அடி நீர் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அப்பொழுது அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் கைப்பிடி கம்பிகள் சேதமானது. தற்போது சேதம் அடைந்த கம்பிகள் உள்ள பகுதியில் பலம் பொருந்தியசவுக்கு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட சவுக்கு பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளது. ஊழியர்களும் அப்பகுதியினை பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் சவுக்கு கம்புகள் அகற்றப்பட்டு இரும்பு கம்பிகள் போடப்பட உள்ளது என்பதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கிய வேடசந்தூர் எம்எல்ஏ!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்த நாள் விழா வடமதுரை நகர திமுக சார்பில் அண்ணா திடலில் கொண்டாடப்பட்டது. வடமதுரை திமுக பேரூர் செயலாளர் மெடிக்கல் எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் சுப்பையன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் வடமதுரை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 45 பேருக்கு வேஸ்டி, சேலைகள் வழங்கினார். பேரூர் துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளி, கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், மகேஷ்,தேன்மொழி, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல அய்யலூர் அருகே அ.கோம்பையில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த எம்எல்ஏ காந்திராஜன், அ.கோம்பையிலிருந்து தபால்புள்ளி, காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி புதூர் வழியாக...
தமிழகம்

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் பட்டா வழங்கிய இடத்தில் குடியிருப்போர் தனிநபர் செல்வாக்கால் வீடுகளை இடித்து துன்புறுத்தி வருவதாக இன்று ( 28-11-2022 ) தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் 70 ஆண்டு காலமாக அந்த இடத்தில் தாங்கள் குடியிருந்து வருவதாகவும் தற்பொழுது அந்த இடத்திற்கான வீட்டு வரி மின் கட்டண வரி செலுத்துவதாகவும் வீட்டை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் கடமலை மயிலாடும்பாறை பொதுமக்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

நடு முதலைக்குளம் கண்மாயில் இளைஞர்கள் சார்பில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடு முதலைக்குளம் கண்மாயில் வருடம் வருடம் மீன்பிடித் திருவிழா நடைபெறும். நடு முதலை குளம் இளைஞர்கள் சார்பாக 6000 மீன் குஞ்சுகள் நேர்த்திக்கடன் ஆக கண்மாயில் விடப்பட்டது .இது காமாட்சி அம்மன் கருப்பசாமி கண்மாய் என அழைக்கப்பட்டு வருடம் ஒரு முறை மீன் பிடி திருவிழா கொண்டாடப்பட்டு மீன்களைப் பிடித்து அதை சாப்பிட்டால் எந்த ஒரு நோயும் நொடியும் இல்லாமல் நலமுடன் இருக்கலாம் என்பது இந்த கிராம மக்களின் ஐதீகம். இதில் ஏராளமான இளைஞர்கள் நேர்த்திக்கடனாக மீன் குஞ்சுகள் வாங்கி காமாட்சி அம்மன் கருப்பசாமி கண்மாயில் விட்டனர் இதில் ஏராளமான இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

விடுமுறை தினத்தில் தாமாகவே முன்வந்து புதர் மண்டிய கிராம சாலையை சீரமைத்த பள்ளி மாணவர்கள்

விடுமுறை தினமென்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான்! தொலைக்காட்சி பார்ப்பதும், கிரிக்கெட் விளையாடுவதும், மொபைலில் கேம்கள் விளையாடுவதும், வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு தூங்குவதும் அல்லது ஊர் சுற்ற கிளம்பி அன்றைய பொழுதுகளை வெட்டியாக போக்குவார்கள். ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காகவும் மாணவச் செல்வங்கள் இல்லாமலில்லை! திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பேரூராட்சியின் உட்கடை கிராமங்களில் ஒன்று சுக்காவழி. இதுநாள் வரை அடிப்படை வசதிகள் கூட கிடைத்திடாமல் தவிக்கும் உழைக்கும் மக்கள் வசிக்கின்ற சிற்றூர் இது. மலை சார்ந்து வாழும் இப்பகுதி மக்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தாலும் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு கதையாகவே கிடப்பில் போடப்பட்டுவிடுறது. தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பல மைல்கள் கடந்து நகர் பகுதிகளை அடைய வேண்டிய நிலையில்யில்தான் இன்றளவும் இவ்வூர் மக்கள் உழண்டு வருகிறார்கள். இந்நிலையில் விடுமுறை தினத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த...
தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அடித்தட்டு மற்றும் பாமர மக்கள் நலன் பெறுவார்கள் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில், மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது, இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அடித்தட்டு மற்றும் பாமர மக்கள் நலன் பெறுவார்கள் ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நட்டப்பட்டு வெறும் கனவுத் திட்டமாகவே இருந்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ,உசிலம்பட்டி பகுதியில் மிகவும் வறட்சியான பகுதி அதன் அடிப்படையில் மக்களின் நலனுக்காக 58 கிராம கால்வாயில் நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் உசிலம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செட்டியபட்டி அருகே உள்ள பசுமாநதி அளவீடு செய்து தண்ணீர்...
தமிழகம்

வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கோரிப்பாளையம் ஜம்புராபுரம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது.  துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, கலந்து கொண்டு வடக்கு மாவட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பொது செயலாளர் ஜியாவுதீன் அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் ஆகியோர் சிறப்பாக சமர்ப்பித்தனர்.  மாவட்ட பொருளாளர் ரகுமான், செயற்குழு உறுப்பினர்கள் சீனி சிக்கந்தர், முகமது தாஹா, ஆகியோர் தீர்மானங்கள் வாசித்தனர். 1- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை மருத்துவமனை அமைந்துள்ள எதிர் சாலை பகுதியில் பார்க்கிங்காக மாறியுள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது முக்கியமான நேரங்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஆகவே போதிய பார்க்கிங் வசதி...
1 407 408 409 410 411 545
Page 409 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!