தமிழகம்

தமிழகம்

விசிக நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் ராணுவீரரின் குடும்பத்திற்கு பாஜகவினர் 200 பேர் ஊர்வலமாக சென்று ஆதரவு – குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதி சேர்ந்த  விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சமூக வலையதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக அக்கட்சி நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி. சி.ஆர்.பி.எப் இவர் மேகலயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதை கண்டித்து ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலையதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குருமூர்த்தியை விசிக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலர் குருமூர்த்திக்கு மிரட்டல் வீடியோ வெளியிட்டனர்.  இதையெடுத்து ராணுவ வீரர் குருமூர்த்தியை...
தமிழகம்

மதுரையில் இன்று சிக்கி நிறுவன ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென மொத்த விடுப்பு – உணவு விநியோகம் சேவை பாதிப்புஸ்வீகி

ஸ்வீகி நிறுவனத்தின் உணவு டெலிவரியின் போது ஊழியர்களுக்கு டெலிவரி ஒன்றுக்கு 5கிலோ மீட்டருக்கு 25ரூபாய் பணம் அளிக்கப்பட்ட நிலையில், 7கிலோ மீட்டருக்கு 25ரூபாய் என ஊதிய தொகை குறைக்கப்பட்டதாகவும், மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஸ்வீகி  ஊழியர்கள் இன்று மொத்த விடுப்பு எடுத்ததனர். மேலும் திடீரென புதிய ஊதிய நடைமுறைகளால் ஊதியம் குறையும் நிலை உள்ளதாகவும், ஏற்கனவே பெட்ரோல் விலைவாசி உயர்வால் நாள்தோறும் செலவு அதிகரிக்கும் நிலை உள்ளதால் பழைய ஊதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய ஊதிய நடைமுறைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்காமலேயே நடைமுறைப்படுத்தியதால் நாள்தோறும் ஊழியர்களின் ஊதியம் குறையும் நிலை உள்ளது. இது குறித்து ஸ்வீகி ஊழியர்கள் வென்டார் அலுவலக மேலாளரிடம் விளக்கம் கேட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என கூறுவதாக கூறி...
தமிழகம்

மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து துரிதமாக செயல்பாட்டு மின் இணைப்பை துண்டித்த மின்சார ஊழியர்கள் விரைவாக வந்த தீயணைப்பு துறையினர்

மதுரை மாநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதிகளான பழங்காநத்தம் பெரியார் நிலையம் ஆரப்பாளையம் காளவாசல் அரசு ரெடி மா பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென பயங்கர சத்தத்துடன் புகை வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அந்த மின் மாற்றிக்கு செல்லக்கூடிய மின்சார இணைப்பை நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் நிலைய  அலுவலர் சேகர் தலைமையிலான...
தமிழகம்

சுந்தரமுடையான் பள்ளியில் வானவில் மன்றம் துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற' தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை மு.மணிமேகலை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியை முல்லைவாணி முன்னிலை வகித்தார்..மாணவர்கள் பங்கேற்று அறிவியல் ஆய்வுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் கனகராஜ், நாகூர், பால முருகன், ஆசிரியை கீதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எட்டாம் வகுப்பு மாணவி இதய சாதனா நன்றி கூறினார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

வெங்கலகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சிஅரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த வானவில் மன்றம் என்னும் புதிய திட்டத்தை தலைமை ஆசிரியர் மு.சேதுராமன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி.செந்தில்குமார், முதுகுளத்தூர் ஒன்றிய (வெங்கலகுறிச்சி) கவுன்சிலர் ஆர்.கலைச்செல்வி ராஜசேகர் மற்றும் முருகேசன் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

20 நாட்களுக்குப் பிறகு மதுரையில் பகுதியில்பலத்த மழை

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மதுரை மாவட்டம் வடக்கு பகுதியான புதூர் தல்லாகுளம் மாட்டுத்தாவணி அண்ணா நகர் பி பி குளம் கிருஷ்ணாபுரம் காலனி கே கே நகர் கோரிப்பாளையம் செல்லூர் ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது இதனால் வாகன ஓட்டிகளும் மற்றும் வேலைக்கு விட்டு வீட்டுக்கு செல்வது கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் ஒரு மணி நேரம் கழித்து தென்பகுதியான பழங்காநத்தம் காளவாசல் அரசர்அடி மாடக்குளம் டிவிஎஸ் நகர் திருப்பரங்குன்றம் ஜெய்ஹிந்த்புரம் முடக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.  இம் மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தோழமை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்னரை ஆண்டுகளில் உரிமைகுரல் எழுப்பாமல் தமிழகத்திற்கு பூஜ்ஜியத்தை தான் பெற்றுத் தந்துள்ளார்கள். முதல்வர் பிரதமரை சந்திக்கிற போது தமிழக உரிமைகளை பெற்றுத்தர முயற்சி எடுப்பாரா? – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் தோழமைக் கட்சி சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த மூன்னரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன என்ன திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார்கள். உரிமைக்குரல் எழுப்பி தமிழகத்தினுடைய உரிமையை ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள் என்று நாம் பட்டியலிட்டு வாதிக்கிற போது, அதிலே பூஜியமே விஞ்சி நிற்கிறது. ஆகவேதான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்கள் தோழமைக் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் உரிமையை காக்க தவறிவிட்டார்கள் என்கிற, அதிர்ச்சி தமிழக மக்களிடத்திலே ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது . பிரதமர் ஜி.20 மாநாட்டுக்கான தலைவர் பதவி ஏற்பு விழாவிலே, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கின்ற இந்த விழாவிலே, நம்முடைய தமிழ்நாட்டுடைய முதலமைச்சர்கள் பங்கேற்கும் போது, பாரத பிரதமரை சந்தித்து எடப்பாடியார் மத்திய அரசுக்கு...
தமிழகம்

நீர் வளத் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு – ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்

“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ர 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் ஜீவன் திட்டம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, “ஜல் ஜீவன் திட்டத்தின் கணக்கீட்டின்படி, 2019-ம் ஆண்டு 16 சதவீதம் இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே குழாய் குடிநீர் வசதி இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து...
தமிழகம்

ராமநாதபுரத்தில் நாளை தேசிய குழந்தைகள் மாவட்ட மாநாடு

ராமநாதபுரத்தில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நாளை நடைபெறவுள்ளது.  ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9:30 மணிக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது  என்ற மைய கருப்பொருள் மாநாட்டை முதன்மை கல்வி அலுவலர் அ.பாலு முத்து துவங்கி வைத்து பேசுகிறார்.  மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பரிசு வழங்கி பாராட்டு உரை நிகழ்த்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி மாணாக்கருக்கு பாராட்டு

மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை, ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவி யருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியரசு தினம், பாரதியார் தின விழாவை நடந்த 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ் , 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணபிரசாத், ஏவிஎம்எஸ் மெட்ரிக்பள்ளி மாணவி ஹாரிணி, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹரினி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் தருண் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். ராமநாதபுரம் டி.டி. விநாயகர், மேல்நிலைப் பள்ளி மாணவர் பத்ரிஸ், மாணவி தனுஷ்கா, ராமநாதபுரம் ஏவிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவி பார்கவி,...
1 405 406 407 408 409 545
Page 407 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!