தமிழகம்

தமிழகம்

சிவகாசி அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுகாதார வளாகம் கட்ட வேண்டும்… தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், எரிச்சநத்தம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 குழந்தைகள் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சுகாதார வளாகம் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. சேதமடைந்து கிடக்கும் சுகாதார வளாகத்தைத் தான் குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும் சுகாதார வளாகத்திற்கு செல்வதால், குழந்தைகளுக்கு நோய்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் பள்ளியின் பின் பகுதியில் எரிச்சநத்தம் கண்மாயிலிருந்து, மற்ற கண்மாய்க்கு செல்லும் நீர்ப்போக்கு கால்வாய் உள்ளது. அந்தப்பகுதியில் முட்செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது. நீர்ப்போக்கு பாதை தூர்ந்து போய் இருப்பதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பண்ணையாக மாறியுள்ளது. பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது....
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு திமுகவினர் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தின முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி அரசு மருத்துவமனைகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினர். இதில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நான்கு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்ததால் ஏழு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

நெடுஞ்சாலைத்துறையினரால் வீடுகள் இடிக்கப்பட்டதால் வீடுகள் இன்றி சாலையில் குடியிருந்து வரும் குடும்பங்களை சந்தித்து தமிழ் புலி கட்சியினர் ஆறுதல் தெரிவித்ததோடு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு மீண்டும் வீடு கட்டி கொடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தெ.கள்ளிப்பட்டி பகுதியில் தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இதனை கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனர்.  ஆனால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் இரண்டு வீடுகளை மட்டும் முழுமையாக இடித்து அகற்றினர் நெடுஞ்சாலை துறையினர். எனவே வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டதால் அதில் குடியிருந்த இரண்டு குடும்பங்கள் தற்பொழுது வீடுகள் இன்றி நடுத்தெருவில் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ் புலி கட்சியின் அமைப்பாளர் நாகை திருவள்ளுவன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சாலையில் வீடுகள் இன்றி தவித்து வரும் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்...
தமிழகம்

சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார்

ஆண்டிபட்டி வெங்கடாஜலபுரம் அருகே சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார். சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த சிறுவனின் மறுவாழ்வு மற்றும் படிப்புக்காக 1098 எண்ணில் தொடர்பு கொண்டு ஆண்டிபட்டி காவல்துறையினர் உதவியுடன் தற்போது சிறுவன் குழந்தைகள் அன்பு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்ற சிறுவனின் மறுவாழ்வுக்கு வழி காட்டிய மருந்தாளுநர் ரஞ்சித்குமாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

காமாட்சிபுரம் தொடக்கப் பள்ளியில் உதயண்ணாவின் பிறந்த நாள் போட்டிகள்

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, தேனி தெற்கு மாவட்ட செயலாளரும்,கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான நா.ராமகிருஷ்ணன் ஆணைக்கிணங்க, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி, காமாட்சிபுரம் ஊராட்சி திமுக சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து ஏசடியான் தலைமையில் இந்து நாடார் தொடக்கப் பள்ளிக்கு மூன்று கேரம் போர்டுகளை இலவசமாக வழங்கி கேரம்போர்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக சின்னமனூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் திருமதி.நிவேதா அண்ணாத்துரை, தேனி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் எஸ்சி/எஸ்டி நலக் குழு தலைவர் எஸ்.அழகாபுரி முத்தையா,ஒன்றிய ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் ஆர்டிஸ்ட்.சக்திவேல், எரக்கோட்டைபட்டி கிளைசெயலாளர் சுருளிவேல்,இந்து நாடார் தொடக்கப் பள்ளியின் செயலாளர் பச்சைக்கனி முருகன்,...
தமிழகம்

அரசு உதவி பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற பெற்றோர், மாணவியர் காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக்கோரி பெற்றோர், மாணவர்கள் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வி கற்பதில் மாணவியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு உதவிபெறும் இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதை அடுத்து  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர். ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன் பள்ளி மாணவியருடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பெற்றோர், மாணவியர் கோரிக்கையை  நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்றி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம்...
தமிழகம்

ராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் அருகே லாந்தை ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஆதிராவிடர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். விடுதி மாணவர்களுக்கு காலையில் வழங்கிய உணவை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களிடம் அரசு அட்டவணை படி தினமும் வழங்கப்படும் உணவு வகைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். உணவுப் பொருள்களின் இருப்பு, தினமும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார். சுகாதார வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் பராமரிக்க வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மாணவர்கள் தங்கி வரும் அறைகளுக்கு சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான கட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாணவர்கள் விடுதி அருகே மைதானம் அமைத்து தர கேட்டுக் கொண்டனர். உடனடியாக மைதானம் அமைப்பது...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மாரிப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் முன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக உத்தப்ப நாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மாரிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னச்சாமி ஆலோசனைப்படி பேச்சியம்மன் கோவில்பட்டி பூத் 49 கமிட்டி தலைவர் பாண்டியராஜன் ஏற்பாட்டில் உசிலம்பட்டி பூபதி அம்மாள் மருத்துவமனை இணைந்து மாரிபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இருமல் காய்ச்சல் கை கால் வலி கிட்டப் பார்வை துரப்பார்வை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பயன்பெற்றனர் இதில் பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பூபதி...
தமிழகம்

ஏர்வாடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 30,000முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சிக்கு உட்பட்டு 15வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெவிக்காமல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள 15 பெண்களை ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து எவ்வித காரணங்களும் சொல்லாமல் நோட்டில் கையெழுத்து பெற்று கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகையில், ஏர்வாடி ஆரம்ப சுகாதாரம் அருகே 15 பெண்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது நாங்கள் விசாரித்தோம் விசாரிக்கும் பொழுது கிராம சபை கூட்டம் நடந்து முடிந்ததாக ஊராட்சி மன்ற...
தமிழகம்

சிவகாசி பகுதியில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியது.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதால், பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின்பு, பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்தபின்பு, பட்டாசு ஆலைகளில் கையிருப்பில் இருக்கும் பட்டாசுகள், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு இடையூறுகள் காரணமாக, பட்டாசு உற்பத்தி பணிகள் சுமார் 40 சதவிகிதம் அளவிற்காக குறைவாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளின் தேவை அதிகமாக இருந்ததால், பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகி விட்டன. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வெகுவாக வந்துள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை...
1 403 404 405 406 407 545
Page 405 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!