தமிழகம்

உசிலம்பட்டி அருகே மாரிப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

227views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் முன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக உத்தப்ப நாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மாரிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னச்சாமி ஆலோசனைப்படி பேச்சியம்மன் கோவில்பட்டி பூத் 49 கமிட்டி தலைவர் பாண்டியராஜன் ஏற்பாட்டில் உசிலம்பட்டி பூபதி அம்மாள் மருத்துவமனை இணைந்து மாரிபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இருமல் காய்ச்சல் கை கால் வலி கிட்டப் பார்வை துரப்பார்வை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பயன்பெற்றனர் இதில் பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பூபதி அம்மாள் மருத்துவர் தினேஷ், மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!