திருமங்கலம் அருகே ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88 வது ஆண்டு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் – பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படும் இரண்டு நாட்களாக கம கம பிரியாணி வாசனையில் தத்தளிக்கும் கிராமம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் , ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு தாய்க் கிராமமாக கருதப்படும் இக்கிராமத்தில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு திருக்கோயில் அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது . இந்நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று திருக்கோயிலில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கடைக்கு விடுமுறை அளித்து , இக்கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வதுடன், முன்னதாக நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்கு பூஜை பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றை தலைசுமையாக ஊர்வலமாக எடுத்து புறப்பட்டு, திருக்கோயிலை அடைந்து பூஜை நடத்தினர். இவ்விழாவிற்காக ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில்...

