மதுரை அவனியாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
மதுரை அவனியாபுரத்தை அடுத்த அயன் பாப்பா குடி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் 14ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் தினமான இன்று அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...








