உலகம்

உலகம்உலகம்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில்...
உலகம்உலகம்

மாணவிகள் வெளிநாடு செல்ல ஆப்கன் தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து படிப்பதற்காக வெளிநாடு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்தது. தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு செப்டம்பர் மாதம் பதவியேற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொறுப்பேற்ற தலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு...
உலகம்உலகம்

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இதேநேரம் தொடருந்து பழுதடைந்ததை நிறுவனம் உறுதி செய்தது. மேலும் அவர்கள் பயணிகளை தனி ஷட்டில் சேவைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மக்கள் முனையத்திற்கு பயணிக்க வேண்டாம், ஆனால் புதன்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு வருமாறு...
உலகம்உலகம்

சீனாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை 10 நாட்களுக்கு நீட்டிப்பு

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அங்குள்ள கான்சு, சான்சி, ஹெனான், அன்ஹுய் உள்ளிட்ட மாகாணங்களில் பகல் நேரங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இனி வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனா முழுவதற்கும் அதிக வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்ப...
உலகம்உலகம்

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு மகுடம் சூட்டும் விழா : சந்தோஷத்தில் திளைத்த மக்கள்

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் னங்குனி (Nguni) மொழி பேசும் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த பாரம்பரிய விழாவில் ஆயிரக்கணக்கான ஜுலு போர் வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். 48 வயதான மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு ராஜ்ஜியத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார். வழக்கப்படி ஏராளமான விலங்குகள் பலியிடப்பட்டு விழா கோலாகலமாகத் துவங்கப்பட்டது....
உலகம்உலகம்

ரஷ்ய அதிபர் புடின் ஆலோசகர் மகள் குண்டு வெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரின் மகள், நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியானார். ரஷ்ய அதிபர் புடினின் மூளையாக செயல்படுபவர், அலெக்சாண்டர் டுகின். போர், அரசியல் போன்ற அனைத்து விஷயங்களிலும் புடினுக்கு ஆலோசனைகளை கூறுபவர், இவர்.தற்போது நடக்கும் உக்ரைன் போர், ஏற்கனவே நடந்த கிரீமியா போர் ஆகியவை அலெக்சாண்டரின் மூளையில் உதித்த யோசனைகள் தான். இவரது யோசனைகளைத் தான், புடின் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்சாண்டரின்...
உலகம்உலகம்

சோமாலியா: ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மொகடிசுவில் உள்ள...
உலகம்உலகம்

உக்ரைனில் செர்னோபில் அணுஉலை விபத்து போல இன்னொரு தாக்குதல் நிகழக்கூடாது: துருக்கி அதிபர் எர்டோகன்

ரஷியப் படைகள் கடந்த மார்ச் மாதத்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா அணு ஆலையைக் கைப்பற்றின. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை அணுசக்தி விபத்து பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது. ரஷியா ஜாபோரிஜியா அணு ஆலையில் தாக்குதலை நடத்த உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இதனை ரஷியா மறுத்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில்...
உலகம்உலகம்

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்கு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...
உலகம்உலகம்

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எப்-16 போர் விமானங்களுடன் தைவான் தீவிர போர் பயிற்சி

தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவான் பயணம் மேற்கொண்டார். இதனால் கோபம் அடைந்த சீனா, தைவான் எல்லை அருகே போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. சீனாவின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்தன....
1 2 3 4 5 41
Page 3 of 41

Right Click & View Source is disabled.

error: Content is protected !!