உலகம்

உலகம்உலகம்செய்திகள்

சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்: முடிவுக்கு வந்தது 11 நாள் மோதல்

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா். இந்த மோதலில் இரு தரப்பினரும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனா். சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து உள்பட சா்வதேச நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதையடுத்து, நிபந்தனையற்ற மற்றும் இருதரப்பு சண்டை நிறுத்த...
உலகம்உலகம்செய்திகள்

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: நவம்பரில் புதிய தேர்தல் அறிவிப்பு

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி வெள்ளிக்கிழமை நள்ளிரவில், நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். காபந்து பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 18 வரை தேர்தல்கள் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தை அமைக்க சர்மா ஓலி கோரிக்கை வைத்திருந்த நிலையில், சட்ட ஆலோசனையின் பேரில்...
உலகம்

செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது!

செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் எலன் மாஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதில் சீனாவும் இணைந்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆய்வுக்காக தியான்வென்-1 விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது சீனா. லாங் மார்ச் 5 என்ற பெயருடன் ஹெனன்...
உலகம்

இஸ்ரேல் – பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்

ஜெருசலேமில் கடந்த ஒரு மாதமாக பதற்றம் நீடிக்கிறது இஸ்ரேலியர்களுக்கு பாலத்தீனியர்களுக்கும் இடையே இப்போது நடந்து வரும் சண்டைகள் இருதரப்புக்கும் இடையே தீர்க்கப்படாத பழைய சிக்கல்களின் தொடர்ச்சிதான். மத்திய கிழக்கில் இது ஆறாத காயம். அதனால்தான் நேருக்கு நேரான மோதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீப ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இஸ்ரேலிய - பாலத்தீன விவகாரம் இடம்பெறவில்லை என்பதற்காக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள் இல்லை....
உலகம்

பிரான்சில் அதிகரித்தது கொரோனா.. கடந்த ஒரே நாளில் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை...
உலகம்

நிம்மதியாக தூங்கணுமா… வேண்டாமா?… அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

நிம்மதியாக தூங்கணுமா... வேண்டாமா?... அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள்...
உலகம்

நிலவுக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார் – விஞ்ஞானிகள் அஞ்சலி

நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது யாவரும் அறிந்ததே. இவருடன் நிலவிற்கு பயணித்தவர்தான் மைக்கல் காலின். 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி  வீரர்களில்  நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு  சென்று  வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால்  நிலவில்...
உலகம்

அமெரிக்க கப்பலை நெருங்கி வந்த ஈரான் கப்பல் – துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கப்பட்டது

பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரான் துணை இராணுவப் படையின் கப்பல் வந்ததையடுத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அமெரிக்க கப்பலுக்கு 200 அடி தூரத்தில் நெருங்கி வந்தமையினால் தமது கப்பலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்க படையினர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் துணை இராணுப் படையினர் நெருங்கி வரும்...
1 39 40 41
Page 41 of 41

Right Click & View Source is disabled.

error: Content is protected !!