தமிழகம்

திருவில்லிபுத்தூரில், அடிப்படை வசதிகளை செய்து தராத, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

45views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகர்மன்ற தலைவராக திமுக கட்சியைச் சேர்ந்த ரவிக்கண்ணன் உள்ளார். 33வது வார்டு கவுன்சிலராக, திமுக நகர செயலாளர் அய்யாவுபாண்டியன் இருந்து வருகிறார்.  இந்த நிலையில் 33வது வார்டு பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் கோவிந்தன் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி, கழிவு நீர் வாறுகால் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால், இந்தப் பகுதியின் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று நோய்களை பரப்பும் கூடாரமாக உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் கிருஷ்ணா நகர் மற்றும் கோவிந்தன் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம், திமுக நகர்மன்ற தலைவர், திமுக நகராட்சி கவுன்சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!