உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சினிமாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் தயாரித்த, இயக்கிய பெரும்பாளான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் விக்னேஷ் சிவன் 5 படங்களின் உரிமையை அவர் வாங்கியுள்ளார்.
தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்தபடத்தில் வசந்த் ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ராக்கி படத்தை முதலில் ஓடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா காரணமாக இப்போதுதிரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வரிசையாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதகாக சொல்லப்படுகிறது. எந்த ஓடிடி மற்றும் எப்போது போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.