தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் பவர் நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா பரிசளிப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

147views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பிரைமரி பள்ளியின் 19 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார்.ஆர் .எம். எஸ். ப்ரோமோட்டர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். விருதுநகர் சத்ரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சங்கர், மதுரை வழக்கறிஞர் கணேசன் பரிசுகள் வழங்கினர். ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை அம்பிகா ஆண்டறிக்கை வாசித்தார். ஜெய கீதா நன்றியுரை நிகழ்த்தினார். பள்ளி மாணவர்களின் நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!