கவிதை

காலத்தின் பிடி…

17views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
சுலபமாக அவர்களை
விரட்டி விடலாம் என்று
நினைத்தால் அதுமுடியாது …
அவர்கள் விரட்ட
ஆரம்பிப்பார்கள் …
மிரட்டலாம் என்றாலும்
முடியாது
அவர்கள் மிரட்டலுக்கு
ஏற்கனவே பணிந்தாகி விட்டது…
ஒழித்து விடலாம் என்றாலும்
சிரமம் தான்
இரண்டாயிரம் கோடி ஆண்டுகளின்
அழிக்க முடியாத பெயராலான
ஒரு படை எடுப்பு…
கொஞ்சம் சிரமம் தான்…
கடந்த முறையே தலைதப்பியது
தீப்தே தம்பிரான்
புண்ணியம்தான் …
நல்ல வேளை ஓர்
அதர்மச் சிங்கியோடு
அது நின்றது…
தலைமைச் சங்கீகள் தப்பினீர்கள் …
ஒவ்வொரு முறையும்
அது சாத்தியப்படும்
வாய்ப்புகள் மிகக் குறைவு….
எதிர்க்கட்சிகளான
உதிர்க்கட்சிகளும் கூட
இப்போது அவர்கள் பக்கம் …
இனி ஒவ்வொரு அடியும்
நீங்கள் சறுக்காமல்
வைக்க வேண்டும்…
எப்போதும் முடியுமா
என்றும் சொல்ல முடியாது …
தேசமே உங்கள்
விழுகைக்கான நாள் குறிக்க
ஆவலாய் இருக்கிறது…
அவர்கள் விட்டாலும்
காலம் பிடிக்கும் …
இராமன் கோயில் கையாடல்கள்
சந்தி சிரிக்கிறது…
காட்டுக்கு போனவனைக்
கூட்டி வந்து
நாட்டுக்குள் கலவரம் செய்தீர்கள் …
எத்தனை முஸல்மான்களின் உயிர்கள் ?
அந்தப் பாவம் சும்மா விடுமா?
மீண்டும் உங்களுக்கும்
ஒரு வனவாசம் நேரலாம் …
அத்தோடு நீங்கள்
காணாமலே போகலாம்…
ஏனெனில் எப்போதும்
காலத்தின் பிடிதான்
கடுமையானது…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!