தமிழகம்

மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து துரிதமாக செயல்பாட்டு மின் இணைப்பை துண்டித்த மின்சார ஊழியர்கள் விரைவாக வந்த தீயணைப்பு துறையினர்

446views
மதுரை மாநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதிகளான பழங்காநத்தம் பெரியார் நிலையம் ஆரப்பாளையம் காளவாசல் அரசு ரெடி மா பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென பயங்கர சத்தத்துடன் புகை வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அந்த மின் மாற்றிக்கு செல்லக்கூடிய மின்சார இணைப்பை நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் நிலைய  அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் மாற்றி ஏற்பட்ட தீ மற்றும் புகையை கட்டுப்படுத்தினர் மேலும் இந்த மின்சார பெட்டியினை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். விரைவாக செயல்பட்டு மின் இணைப்பைத் துண்டித்த மின் ஊழியர்களும் மற்றும் அதிகாரிகளும் சமூகத்துக்கு விரைவாக வந்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினை தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!