சினிமாசெய்திகள்

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘யுத்த சத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

112views

விஜய் நடிப்பில் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் இயக்கி வரும் ‘யுத்த சத்தம்’ படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்ட்ர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘யுத்த சத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!