சினிமாசெய்திகள்

விஜயின் 66ஆவது படத்தில் ஜோடி கீர்த்தி சுரேஷ்.

137views

ற்போது விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத “விஜய் 65” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. 2ஆம் கட்ட படிப்பிடிப்புகள் சென்னையில் நடக்கவிருந்த நிலையில் கொரொனா தொற்றின் முழு ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் படப்பிடிப்புகளை வெகு விரைவாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். படத்தின் நெல்சன் இயக்குகிறார்.

இந்நிலையில் விஜய்யின் 66 படத்தினை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் தெலுங்கு திலையுலகின் பிரபல இயக்குனர் வம்பி பைடி பல்லி இயக்கவுள்ளார். இவர் தெலுங்கு திரையுலகின் வசூல் சாதனை படங்களான மகேஷ் பாபுவின் “மகரிஷி”, ராம் சரணின் “எவடு” ஜூனியர் என்.டி.ஆரின் “பிருந்தாவனம் (இப்படத்தினை விஜய்காக ரீமேக் செய்ய இருந்த நிலையில் கைவிடப்பட்டது.) பிரபாசின் “முன்னா” தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடித்த “தோழா” ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!