சினிமாசெய்திகள்

வடிவேலு நடிக்கும் ‘டிடெக்டிவ் நேசமணி’- தயாரிப்பாளரின் திடீர் ட்விட்டர் பதிவு..!

103views

ஓடிடி தளத்திற்காக தயாராகும் டிடெக்டிவ் நேசமணி என்கிற சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு பிரபல தயாரிப்பாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

எனினும் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதில் தவறுவது கிடையாது. மீண்டும் இவர் எப்போது வருவார் என்று தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வப்போது சில படங்களில் வடிவேலு நடிக்கவுள்ள்டஹாக சொல்லப்பட்டாலும் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

இந்நிலையில் ஓடிடி தளத்திற்காக தயாராகும் ‘டிடெக்டிவ் நேசமணி’ என்கிற தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக சில போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

அவை ஃபேன் மேடு போஸ்டர் என்றும், இதுவரை அப்படி தகவல் வடிவேலு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதை பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார் வெளியிட்டுள்ளார். எனினும், ரசிகர் தயாரித்துள்ள போஸ்டர் நன்றாகவுள்ளது. அதில் வடிவேலு சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!