கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
301views
You Might Also Like
ஐதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பிறந்தநாள் முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நந்தமுரி டாரகா ராமாராவ் (NTR) 103-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் பேரன் சினிமா நடிகர் ஜூனியர்...
பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வருக்கு வரும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கீடு
கேரளாவில் கடந்த வாரம் காங்கிரஸ் முதல்வர் சதீஷன் புதியதாக பதவி ஏற்றார். வரும் 26-ம் தேதி செவ்வாய்கிழமை புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம்...
ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு 76-வது பிறந்தநாளில் 269 அண்ணா கேன்டீனில் இலவச உணவு
அந்திர பிரதேச முதல்வர் நராசந்திரபாபு நாயுடு 76-வது பிறந்தநாள் முன்னிட்டு அம்மாநிலம் முழுவதும் உள்ள 269 அண்ணா கேண்டீனில் ரூ.70 லட்சம் (முதல்வர்தனிப்பட்ட பணம்) மதிப்பில் இலவச...
புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணா என்ற அபூர்வ ஓவியம் மும்பையில் ரூ. 167 கோடிக்கு விற்பனை
மும்பையில் சாப்ரோனார்ட் நிறுவனத்தின் வசந்த காடு நேரடி ஏலம் நிகழ்ச்சியில் மறைந்த ஓவியர் ரவிவர்மாவின் படைப்புகளில் மிக முக்கியமாக யசோதை மற்றும் கிருஷ்ணா ஓவியம் ரூ.167.20 கோடிக்கு...
திருப்பதி – திருமலையில் பெருமாள் ஹனுமான் வாகனத்தில் வீதியுலா
திருப்பதி - திருமலையில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ எம்பெருமான் ஹனுமான் வாகனத்தில் 4 மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார். கே.எம். வாரியார்...




