விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம்

53views

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 வடிவ ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மா (48), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52) ஆகியோரின் அபார ஆட்டத்தில் 20 ஓவர்களில் 154/8 என்று முடிந்தது, ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜொனாசென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ரேணுகா சிங்கின் அற்புதமான பவுலிங்கில் அவரிடம் 4 விக்கெட்டுகளை இழந்து 49/5 என்று தட்டுத்தடுமாறியது, பிறகு தோல்வியின்பிடியிலிருந்து அந்த அணியை ஆஷ்லி கார்ட்னர் (52), கிரேஸ் ஹாரிஸ் (37) மீட்டதோடு 157/7 என்று அபார வெற்றி பெற்றனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடியது. தொடக்க வீராங்கணைகளாக மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான விளையாடிய ஷபாலி வர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

யாஷிகா பாட்யா 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கடைசிகட்டத்தில் இந்திய அணி ரன்குவிக்கமுடியமல் தவித்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விரட்டியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்தது. ரேணுகா சிங் அதியற்புதமாக வீசி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.

இதனால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசையில் களமிறங்கிய ஆஸ்லீக் கார்ட்னர் அதிரடியாக விளையாடினார். அவருக்கு கிரேஷ் ஹாரீஸ் பக்கபலமாக விளையாடி 37 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்து 3 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்லீக் கார்ட்னர் 35 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!