உலகம்உலகம்

அமெரிக்காவின் நான்சி பெலோசி பயணம்.. தைவான் தீவு அருகே பிரம்மாண்ட போர் ஒத்திகை நடத்தி மிரட்டிய சீனா!

59views

சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் தைவான் தமது ராணுவத்தை முழு வீச்சில் தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொள்வதால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

1940களின் சீனாவின் கம்யூனிஸ்டுகளுக்கும் குமிண்டாங் அரசுக்கும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தின் இறுதியில்- அதாவது சீனா புரட்சியின் முடிவில் பெரும் நிலப்பரப்பை கைவிட்டது குமிண்டாங் அரசு. மாவோ படைகளிடம் பெரும் நிலப்பரப்பை பறிகொடுத்த குமிண்டாங் அரசு தைவான் பிராந்தியத்துக்கு இடம்பெயர்ந்தது. 1970கள் வரை இந்த தைவான் நிலப்பரப்புதான் சீனா என சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டும் வந்தது. ஆனால் பின்னர் சர்வதேச கட்டமைப்பில் சீனாவின் கை ஓங்கியது. இதனால் தைவானின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியானது. தைவானையும் சீனா தமது நாட்டின் ஒரு பகுதியாக இன்னமும் கூறி வருகிறது. இதனால் தைவானை ஆக்கிரமிப்பதில் சீனா மும்முரமாக இருந்தும் வருகிறது.

குறிப்பாக உக்ரைன் நாடு மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியது முதல், தைவான்-சீனா விவகாரமும் பேசப்பட்டு வருகிறது. தைவான் நிலப்பரபரப்பை சுற்றி சீனா ராணுவத்தை குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தைவான் மீது சீன ராணுவம் படையெடுப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இருந்த போதும் தைவான் பிராந்தியத்தில் சீனாவின் போர் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 1997-ம் ஆண்டுக்குப் பின்னர் தைவான் செல்லும் அமெரிக்கா பிரதிநிதி நான்சி பெலோசி. இதற்கு சீனா மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அமெரிக்கா நெருப்போடு விளையாடுவதாகவும் சீனா கடுமையாக எச்சரிக்கையும் விடுத்தது.

அத்துடன் நிற்காத சீனா, தைவானின் தீவுக்கு அருகே பிரம்மாண்ட போர் ஒத்திகையையும் நடத்தி காட்டி இருக்கிறது. பூஜியன் மாகாணத்தை ஒட்டிய பிங்டன் தீவில்தான் சீனாவின் போர் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனால் தைவான் பிராந்தியத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!