தமிழகம்

ஈகோ யுத்தத்தில் உசிலம்பட்டி ஊராட்சி-நகராட்சி.பாழ்பட்டுக் கிடக்கும் லோல்பட்டுக் (பரிதவிக்கும்) நூலகவாசிகள்.

152views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தைத்திடல்.உசிலம்;பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான இந்த சந்தைத்திடலில் வாரச்சந்தை பூ சந்தை காய்கறி சந்தை உழவர்சந்தை போன்ற சந்தைகளும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நூலகம் போன்ற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கும் 100க்கணக்கன படித்த ஆண்கள் பெண்கள் நூலகத்திற்கும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நூலகத்திற்கு முன் பகுதியில் கோழி இறைச்சிக்கழிவுகள் சந்தைக் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாகக் காட்சியளிக்கின்றன.இக்குப்பைகளை யார் அள்ளுவது என்பதில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கும் நகராட்சி நிர்வாகத்திற்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் இருவருமே அள்ளாமல் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது.

ஆரம்பத்தில் கடந்த 27 வருடங்களுக்கு முன் உசிலம்பட்டி நகராட்சி ஆவதற்கு முன் சந்தைத்திடலில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.அப்போது சந்தைத்திடலில் பாரமரிப்பு பொருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.கடந்த 1995ம் ஆண்டு நகராட்சி உதயமாக பின் பேருந்து நிலையத்தின் பின்புறம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் உள்ள சந்தைத்திடல் ஊராட்சி ஒன்றியத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.கடை வாடகை மூலம் மட்டும் மாதம் அரை கோடிக்கு மேல் வருமானம் சந்தைத்திடலுள்ள வாரச்சந்தை தினசரி சந்தை பூ மார்க்கெட் மூலம் வருமானம் வருவதைப்பார்த்த நகராட்சி நிர்வாகம் சந்தைத்திடலை தங்களிடம் ஒப்படைக்கும் படிடி நீதிமன்றம் மூலம் ஊராட்சி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.இரு தரப்பிலும் மாறி மாறி வழக்கு தொடர தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை காரணம் காட்டி இரு நிர்வாகத்தின் தரப்பிலும் சந்தைத் திடலில் குவியும் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றன.இதனால் சந்தைத்திடல் வளாகப்பகுதி பராமரிப்பின்றி காணப்படுகின்றது.மழைக்காலங்களில் சந்தைத்திடல் முழுவதும் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகின்றன.இரு தரப்பிலும் நிலவும் ஈகோ யுத்தத்தால் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றன.இதனால் மலை போல் குவியும் குப்பைக்கு சிலர் அடிக்கடி தீ வைப்பதும் தீயினால் ஏற்படும் புகையினால் நூலகத்திற்கு படிக்க வருபவர்கள் கடந்த 8 வருடமாக நச்சுப்புகையை சுவாசிக்க வேண்டியுள்ளது.மேலும் கோழி இறைச்சி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தினால் மூக்கை பிடித்துக் கொண்டே கல்லூரி மாணவ மாணவிகள் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகின்றனர்.துர்நாற்றத்தினால் ஏற்படும் வாடையால் நூலகத்தின் ஜன்னலை மூடி விட்டு புழுக்கத்துடனேயே படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து படிக்கும் வாசகர் வட்டம் குழு சார்பாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி ஊராட்சியிடம் பல முறை எவ்வித பலனும் இல்லை.குப்பை மற்றும் துர்நாற்றத்தினால் நூலகத்திற்கு படிக்க வரும் இளைஞர்களின் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அரசும் அரசின் திட்டங்களும் மக்கள் பயன் பெறுவதற்காகவே உள்ளன.ஆனால் உசிலம்பட்டியிலோ ஊராட்சி- நகராட்சியின் ஈகோ யுத்ததத்தால் வருங்கால அப்துல் கலாமை உருவாக்கும் நூலகத்திற்கு யாரையும் வர விடாமல் வைத்து படித்த இளைய சமுதாயத்தை உருவாக்கவிடாமல் தடுக்கின்றனரோ என சமூக ஆர்வலர்களின் ஜயப்படாக உள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!