உலகம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் நடைப்பெற்ற குருதிதான முகாம்

20views
உதிர தானம் மனிதநேய பணிகளில் மிக சிறந்தது என்பதை பரைசற்றும் விதமாக, உதிர தான குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து இரத்த தான முகாம்களை நடத்திவரும் சமூக சேவை அமைப்பான துபாய் கிரீன் குளோபின் அடுத்த முன்னெடுப்பாக, உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று 14.07.2026 ஞாயிறு, இரத்த பிளேட்லெட் தான முகாம் ஷார்ஜாஹ் முவைலா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார். நிகழ்வில் பல நபர்கள் கலந்துகொண்டு பிளேட்லெட் மற்றும் பிளாஸ்மா தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சுசித்ரா, ஊர்வசி, ஆசிப், மணவாளன், நிஷாத், ஷமீர், ஷாஹித், மாஜிதா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கிரீன் குளோப் உறுப்பினர்கள் பீர் முஹம்மது, சபீர், அபு பக்கர் மற்றும் ஜிப்ரீல்,முகம்மது உஸ்மான் நவீஸ் சங்கரா, சுப்புராஜ், ஹபீப் உள்ளிட்ட தன்னார்வளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.கொடையாளர்கள் உட்பட அனைவருக்கும் பழங்கள், உணவு வழங்கப்பட்டது. இறுதியில் நிகழ்வு சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!