தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் விநாயகர் சதுர்த்திகொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம்

69views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு வேலுர்கோட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய காட்பாடி, காங்கேயநெல்லூர், விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் எத்தனை அடி உயரம் வைக்க வேண்டும், முக்கிய பொறுப்பாளர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும், பின்பு அனைத்து சிலைகளும் 4ம் நாள் சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோயில் எதிரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு சிலைகளை எப்படி விதர்சனம் செய்ய வேண்டும் என்பதையும். வேலூர் விஐடி பல்கலைக்கழகம் எதிரில் பழைய காட்பாடி அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான 4.26 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, இது சம்மந்தமாக இந்து முன்னணி வழக்கறிஞர் அணியினர் மற்றும் கிராம மக்கள் மூலம் மீட்க சட்ட நடவடிக்கை எடுப்பது, காட்பாடி தாராபடவேடு அருள்மிகு சுந்தரி அம்மன் கோயிலுக்குள் கிருஸ்துவ மதத்தினர் அத்துமீறி நுழைவதை தடுக்க வேண்டும். மேலும் காட்பாடி மண்டலத்தில் இந்துகோயிலுக்கு சொந்தமான சில ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் இந்து முன்னண மாவட்டசெயற்குழு உறுப்பினர் கோபி, இந்து இளைஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்வரன், இந்து வியபாரிகள் நலச் சங்க மாவட்ட செயலாளர் கள் கோபிநாதன், குணசேகரன், காட்பாடி மண்டல இந்து முன்னணி தலைவர் கார்த்திக், மண்டல செயலாளர் வேல்முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!