தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை, இரத்தினகிரி கோயிலில் அடிமாதம் கிருத்திகை முன்னிட்டு அரோ, கரா என்ற கோஷத்துடன் காவடி எடுத்த பக்தர்கள்

54views
தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர்கள் பரணி காவடி, ஆடி கிருத்திகை காவடி எடுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தினர். வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் பக்தர்கள் ஏரளமான காவடி எடுத்து வந்து மலை ஏறி வள்ளிதெய்வானை முருகனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் செய்து இருந்தனர்.

அதேப்போல் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஏரளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர், ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். வேலூர் அடுத்த தீர்த்தகிரி மலையில் உள்ள வடிவேல்முருகன் கோயிலிலும் ஆடிகிருத்திகை விமர்சியாக கொண்டாடப்பட்டது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!