டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு
மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட...